தமிழகம்

அதிமுகவுக்கு ஆதரவு: முக்குலத்தோர் பாசறை

செய்திப்பிரிவு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஜெயலலி தாவை ஆதரிப்பதாக அகில இந்திய முக்குலத்தோர் பாசறைத் தலைவர் வி.ஜி.சிற்றரசு தெரி வித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கும்ப கோணத்தில் செய்தியாளர் களிடம் கூறியது: ஆர்.கே. நகர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை முழு ஆதரவைத் தெரிவிக்கிறது.

மேலும், அவர் வரலாறு காணாத வகையில் பெரும் வெற்றி யடைய தேர்தல் பணியாற்றுவோம். எதிர்த்து போட்டியிடும் வேட் பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்கும் வகையில் முக்குலத்தோர் பாசறை பாடுபடும் என்றார்.

          
SCROLL FOR NEXT