தமிழகம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண்: டிஎம்இ அலுவலகத்தில் இன்று வெளியீடு

செய்திப்பிரிவு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண் மருத்துவக் கல்வி இயக்கக (டிஎம்இ) அலுவலகத்தில் இன்று வெளியிடப்படுகிறது.

தமிழகத்தில் உள்ள 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,555 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன. சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் 100 பிடிஎஸ் இடங்கள் இருக்கின் றன. இவற்றில் அகில இந்திய ஒதுக் கீட்டுக்கு 15 சதவீதம் இடங்கள் போக, மீதமுள்ள 85 சதவீத இடங்கள் மாநில அரசுக்கு உள்ளது. இந்நிலை யில் 2015-16-ம் கல்வியாண்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப் பங்கள் அனைத்து கல்லூரிகளிலும் கடந்த மாதம் 11-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை வழங்கப்பட்டன. தமிழகம் முழுவதும் மொத்தம் 35,667 விண்ணப்பங்கள் விற்பனையாகின. பூர்த்தி செய்யப்பட்ட 32,184 விண் ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன.

இந்நிலையில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான ரேண்டம் எண் கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்கக அலுவலகத்தில் இன்று காலை 10.30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தரவரிசைப் பட்டியல் 15-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட கவுன்சலிங்கை ஜூன் 19-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை நடத்த மருத்துவக் கல்வி இயக்ககம் திட்டமிட்டுள்ளது.

SCROLL FOR NEXT