தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்துவிடப்படாத நிலையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
ஆவின் ஊழலைத் தொடந்து அந்த துறை அமைச்சரின் பதவி பறிக் கப்பட்டது. வேளாண் அதிகாரி தற்கொலைக்கு பிறகு அந்தத் துறை யின் அமைச்சரும் பதவி பறிக்கப் பட்டு கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் கோயில் பூசாரி தற்கொலை செய்து கொண்டதன் பேரில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது புகார் எழுந்தபோது, அவர் கைது செய்யப் பட்டார். ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி மட்டும் கைது செய்யப்படாதது ஏன்?
குறுவை சாகுபடிக்கு இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்படுமா என்று கேட்டிருந்தேன். திறக்கப் படாது என்று தாமதமாக அறிவிக் கப்பட்டுள்ளது. குறுவை சாகுபடி இல்லாத சூழலில், விவசாயி களுக்கு உதவி செய்யப்போவதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள் ளார். குறுவை சாகுபடி செய்ய இயலாத விவசாயிகளுக்கு ஏக்கருக்கு இவ்வளவு என்று போதுமான நிவாரணத் தொகையை அரசே வழங்க வேண்டும்.
மத்திய பாஜக அரசு தொடர்ந்து இந்தியைத் திணித்து வருகிறது. பிரதமரின் எண்ணத்தை அறியாமல் அவருக்கு கீழே உள்ளவர்கள் இந்தியை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து மாநிலங்களிலும் சமஸ்கிருத கல்வியின் தற்போதைய நிலையை ஆய்வு செய்ய இருப்பதாக தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மையம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இதை தமிழக அரசின் கல்வி யியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் முன்மொழிந்து, மாநில பள்ளிக் கல்வித்துறை மற்றும் மெட்ரிகுலே சன் பள்ளிகளின் இயக்குநர்களுக்கு அனுப்பியுள்ளது. சமஸ்கிருத திணிப்பை மத்திய அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.