காங்கிரஸ் உறுப்பினர் சேர்க் கையை தீவிரப்படுத்த 58 மாவட் டங்களுக்கு 52 பொறுப்பாளர் களை அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நியமித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
மாநில ஊடகப் பிரிவு தலைவர் ஆ.கோபண்ணா சென்னை வடக்கு, தெற்கு, மத்தியம், மாநி லப் பொருளாளர் நாசே ராமச்சந் திரன் - வேலூர் மாநகர், கிழக்கு மற்றும் மேற்கு, மாநிலப் பொதுச் செயலாளர் எம்.ஜோதி - திரு வள்ளூர் வடக்கு, விஷ்ணுபிர சாத் - விழுப்புரம் தெற்கு, மாநில துணைத் தலைவர் எச்.வசந்த குமார் - கிருஷ்ணகிரி, தருமபுரி, மாநிலப் பொதுச்செயலாளர் கே.சிரஞ்சீவி-மதுரை வடக்கு, தனுஷ்கோடி ஆதித்தன், பி.வேல் துரை-தூத்துக்குடி மாநகர், வடக்கு மற்றும் தெற்கு ஆகியோர் உட்பட 58 மாவட்டங்களுக்கு 52 பொறுப்பாளர்கள் நியமிக் கப்பட்டுள்ளனர். இவர்கள், தங் களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங் களில் உறுப்பினர் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்த உதவ வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் உறுப்பினர் சேர்க்கை கடந்த ஜனவரியில் தொடங்கியது குறிப்பிடத் தக்கது.