தமிழகத்தில் விற்பனை செய் யப்படும் அனைத்து வெளி நாட்டு உணவுப் பொருட் களையும் ஆய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறி யுள்ளார்.
மேகி நூடுல்ஸ் விற் பனைக்கு தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஏ.எம்.விக்கிர மராஜா, ‘தி இந்து’வுக்கு அளித்த பேட்டி:
வெளிநாட்டு நிறுவனங்களால் இந்தியாவில் எப்படி தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்ய முடிகிறது?
வெளிநாட்டு நிறுவனங்கள் இந்திய அதிகாரிகளின் தேவைகளை பூர்த்தி செய்து, தங்கள் தரமற்ற உணவு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்து வருகின்றன. இந்தியாவில் உணவு பாதுகாப்பு சட்டங்கள் எல்லாம் சிறு வணிகர்களுக்குதான். இவர்களுக்கு இல்லை.
மேகி நூடுல்ஸ் இந்தியாவில் எப்படி பிரபலமானது?
30 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட மேகி நூடுல்ஸ் முதலில் குழந்தைகளுக்கான பொம்மைகளுடன் சேர்த்துதான் விற்பனை செய்யப்பட்டது. அதன் பின்னர் ‘2 நிமிடங்கள்’ என்ற விளம்பர உத்தியை அவர்கள் பின்பற்றினர். பெற்றோருக்கும் இந்த உணவை தயாரிப்பது எளிதாக இருந்தது. பின்னர் பிரபல திரைப்பட நடிகர்கள் இதற்கு விளம்பரம் செய்தனர். இப்படித்தான் மேகி நூடுல்ஸ் சந்தையை பிடித்தது.
இந்தியாவில் நூடுல்ஸ் விற்பனையில் ஆண்டுக்கு ரூ.30 ஆயிரம் கோடி வர்த்தகம் நடைபெறுகிறது. இதில் மேகி நூடுல்ஸ் ரூ.10 ஆயிரம் கோடிக்கான சந்தையை தன் வசம் வைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் மேகி நூடுல்ஸ் ஆண்டுக்கு ரூ.1000 கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேகி நூடுல்ஸை இதுநாள் வரை நாங்கள் விற்பனை செய்து வந்தது எங்களுக்கு மன வேதனையை அளிக்கிறது.
மேகி நூடுல்ஸுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
நாங்கள் விற்பனை செய்து வரும் வெளிநாட்டு நிறுவனங் களின் 14 வகை உணவு பொருட்களை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். அவற்றில் உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்கள் ஏதேனும் இருப்பது ஆய்வில் தெரிய வந்தால் அதை பொது மக்கள் மத்தியில் தெரி விப்போம். அத்தகைய பொருட்களை விற்பனை செய்யமாட்டோம்.
இந்த சம்பவத்துக்கு பிறகு அரசிடம் என்ன வலியுறுத் தப்போகிறீர்கள்?
மேகி நூடுல்ஸை இந்தியாவில் விற்க தரச்சான்று வழங்கிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது விதிக்கப்பட்டுள்ள தடையை எதற்காகவும் நீக்கக் கூடாது. அனைத்து வெளிநாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருளையும் போதிய கால இடைவெளியில் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.