ஆர்.கே.நகரில் பிரச்சாரம் மேற் கொண்ட முதல்வர் ெஜயலலிதா வுக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
போயஸ் கார்டன் இல்லத்தில் இருந்து மாலை 6.25 மணிக்கு புறப்பட்ட முதல்வர் ஜெயலலிதா ராயபுரம் எம்.ஜி.ஆர். சிலை பெட்ரோல் பங்க் அருகே தனது பிரச்சாரத்தை தொடங்கினார்.
காசிமேடு, சூரிய நாராயண செட்டி தெரு, வீரராகவன் சாலை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, கிராஸ் ரோடு ஜங்ஷன், அருணாச்சலேஸ்வரர் கோயில் தெரு வழியாக திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பை 7.06 மணிக்கு வந்தடைந்தார். அங்கு வாகனத்தின் உள்ளிருந்தபடியே அவர் 12 நிமிடங்கள் உரையாற்றி விட்டு அடுத்த பகுதிக்கு புறப் பட்டார்.
பின்னர் வைத்தியநாதன் சாலை, வைத்தியநாதன் பாலம் வழியாக எண்ணூர் நெடுஞ் சாலை சந்திப்புக்கு வந்த ஜெயலலிதா, அங்கு குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்கள், பொதுமக்கள் மத்தியில் பேசி னார். அங்கிருந்து எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை எழில் நகர் வழியாக போயஸ் கார்டன் திரும்பினார். ஜெயலலிதாவுடன் சசிகலாவும் வந்தார்.
ஜெயலலிதா பிரச்சாரத்தை தொடங்கிய ராயபுரம் எம்.ஜி.ஆர். சிலை முதல் திருவொற்றி யூர் நெடுஞ்சாலை, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை எழில் நகர் வரை சாலையின் இருபுறமும் மதியம் 2 மணி முதலே இரும்பு தடுப்புகளை காவல்துறையினர் அமைத்திருந்தனர். இந்த தடுப்புகளை மீறிச் செல்ல யாரும் அனுமதிக்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் சிரமத் துக்கு ஆளானார்கள்.
முதல்வர் ஜெயலலிதா திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்புக்கு வருவதற்கு 2 மணி நேரத்துக்கு முன்னரே அங்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் வீட்டுக்கு போக சிரமப் பட்டனர். சாலையின் இருபுறமும் திரண்டிருந்த அதிமுக தொண் டர்கள் ஜெயலலிதாவுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அதிமுகவினருடன் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்கள் தங்களின் கொடியுடன் பிரச்சா ரத்தில் பங்கேற்றனர்.
ஆர்.கே.நகரில் போட்டியிடும் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கத்தின் வேட்பாளர் பொன்.குமாரசாமி நேற்று மாலை 4 மணிக்கு திருவொற்றியூர் நெடுஞ்சாலை சந்திப்பு பகுதியில் பிரச்சாரம் செய்ய வந்தார். ஜெயலலிதாவின் பிரச்சாரத்துக்காக அங்கு காத்தி ருந்த அதிமுக தொண்டர்கள் அவரின் பிரச்சார வாகனம் மீது குடிநீர் பாட்டில்கள் மற்றும் பாக்கெட்டுகளை வீசி எறிந்தனர். அதை சமாளித்துக் கொண்டு குமாரசாமி வாக்குசேகரித்தார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவின் பிரச் சாரத்தால் ஆர்.கே.நகர் தொகுதி யில் உள்ள பள்ளிகளுக்கு திங்கள் கிழமை மதியம் விடுமுறை அளிக்கப்பட்டது. பெற்றோர் களுக்கு குறுஞ்செய்தி மூலம் குழந்தைகளை அழைத்துச் செல்லுமாறு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தியிருந்தன.