தமிழகம்

‘அரசு இயந்திரம் முடங்கியுள்ளது’: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் அரசு இயந்திரம் முடங்கியிருப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

திருச்சி விமான நிலையத் துக்கு நேற்று வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை யொட்டி அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏ-க்கள் என பலரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், அரசு இயந்திரம் முற்றிலுமாக முடங்கியுள்ளது.

ஆளும்கட்சி பணபலம் மற்றும் அதிகார பலத்தைப் பயன்படுத்திவருகிறது. தேர்தல் ஆணையம் இதைத் தடுக்கவில்லை. தேர்தல் ஆணையம் சுமுகமாகவும், நேர்மையாகவும் தேர்தலை நடத்த முன்வரவேண்டும். மத்தியில் பாஜக, மக்கள் விரோத ஆட்சி நடத்தி வருகிறது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. மேலிருந்து கீழ் வரை ஊழல். இவற்றை விளக்கி நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறோம் என்றார் அவர்.

SCROLL FOR NEXT