தமிழகம்

நாளை பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேகம்: பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் போலீஸார்

செய்திப்பிரிவு

திருவல்லிக்கேணி அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழா நாளை (ஜூன் 12) நடைபெறுகிறது. இவ்விழா பாது காப்பு பணியில் 2 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

நாளை காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள்ளாக கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதையொட்டி பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டு வருகிறது. பக்தர்களை நெறிப்படுத்த,ஆங்காங்கே கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. 4 இடங்களில் தற்காலிக கழிப்பறை களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோயிலின் முன்னே பல ஆண்டுகளாக இருந்து வந்த கடைகள் அனைத்தும் அகற்றப் பட்டுள்ளன. பக்தர்கள் வரிசையில் செல்வதற்காக தடுப்புகளும் அமைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று காலை அனைத்து விமான கலசங்களும் தங்க முலாம் பூசி, வரகு அரிசியால் நிரப்பி, யாகசாலை பூஜைக்கு கொண்டு செல்லப்பட்டன. இப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மா.வீரசண்முக மணி, கூடுதல் ஆணையர் மா.கவிதா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர், அக்கலசங்களை கோபுரங் களின் மீது வைக்கும் பணி நடை பெற்று வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் மா.கவிதா கூறும்போது, “கும்பாபிஷேக விழாவையொட்டி, பக்தர்களின் வசதிக்காக மாநகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வர பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. கோயில் முழுவதும் 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைவரது நடமாட்டமும் கண் காணிக்கப்படும். கும்பாபிஷேக தினத்தன்று முழுவதும் பக்தர்க ளுக்கு இலவச அன்னதானமும், லட்டு உள்ளிட்ட பிரசாதங்களும் வழங்கப்படும்” என்று கூறினார்.

கும்பாபிஷேக விழாவை யொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல காவல் இணை ஆணையர் சி.ஸ்ரீதர் தலைமையில், மயிலாப்பூர் துணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட போலீஸார் கோயில் மற்றும் அதனைச் சுற்றிலும் நேற்று ஆய்வு நடத்தினர்.

SCROLL FOR NEXT