தமிழகம்

செங்கல்பட்டில் பரபரப்பு: அரசினர் இல்லத்தில் 6 சிறார்கள் தப்பி ஓட்டம் - காவலர் பணியிடங்களை நிரப்பாததுதான் காரணமா?

செய்திப்பிரிவு

செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே உள்ள அரசு சிறார் இல்லத்திலிருந்த 6 சிறுவர்கள், நேற்று முன்தினம் இரவு தப்பி சென்றனர். சிறுவர் இல்லத்தில் காவலர் பணியிடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நிகழ காரணம் என சமூக ஆர்வலர் குற்றம்சாட்டுகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சிறுவர்களுக்கான அரசினர் சிறப்பு இல்லம் ஒன்று அமைந் துள்ளது. கடந்த 2008-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் இந்த சிறுவர் இல்லத்தில் தற்போது 36 சிறுவர்கள் தங்க வைக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில், இங்கிருந்த 6 சிறார்கள், அறையின் இரும்பு கதவுகளை உடைத்துக் கொண்டு நேற்று முன்தினம் இரவு தப்பி சென்றனர்.

அரசினர் சிறுவர் இல்லத்தின் காவலர் பணியிடங்கள் ஆண்டுக் கணக்கில் நிரப்பப்படாமல் காலி யாக உள்ளதே, இதுபோன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நிகழ காரணம் என்று போலீஸாரும், சமூக ஆர்வலர்களும் குற்றம்சாட்டு கின்றனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலர் களும் போலீஸ் வட்டாரங்களும் கூறியதாவது: சிறுவர்கள் இல்லத்தில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட 5 காவலர் பணியிடங்கள் உள்ளன. இதில், 4 காவலர் பணியிடங்கள் கடந்த 4 ஆண்டுகளாக காலியாக உள்ளன. இதனால், வாட்சுமேன் பணியில் உள்ள 2 பேரை வலுக்கட்டாயமாக, இரவு நேர கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தி வருகின்றனர். இவர்களும் செவித்திறன் குறைபாடுகளுடன் பணி செய்து வருவதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு குறைபாடு

இதனால், இரவு நேரத்தில் சிறுவர் இல்லத்தின் பாதுகாப்பு கேள்விக் குறியாகி உள்ளது. சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள அறைகளின் கதவுகளை சிறுவர்களால் சுலபமாக திறந்து விட முடிகிறது.

இதனால், இது மாதிரியான அசம்பாவிதங்கள் அடிக்கடி நடந்து வருகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, சிறுவர்களுக்கான அரசினர் சிறப்பு இல்ல வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக சிறுவர்கள் இல்லத்தில் காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், இரவு நேர பாதுகாப்புப் பணியில் வாட்சுமேன்கள் ஈடுபடுத்தப்படு கின்றனர். காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மற்றும் சிறுவர்கள் தங்க வைக்கப்படும் அறைகளின் கதவுகளை பாதுகாப் பான முறையில் மாற்றி அமைப்பது குறித்தும் சமூக பாதுகாப்புத் துறை ஆணையருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இல்லத்தில் தற்போது சிறுவர்களைப் பாதுகாப்பாக தங்க வைக்க புதிய கட்டிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் பயன்பாட்டுக்கு வந்தால் பாதுகாப்பு பலப்படும். சிறுவர் இல்லத்தில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை பாது காப்பு அம்சங்கள் தொடர்பாக அரசுக்கு பரிந்துரை செய்யப் பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன

SCROLL FOR NEXT