தமிழகம்

ஐஐடி போராட்டத்தில் கைதானவர்களை விடுவிக்க வேண்டும்: பாரிவேந்தர் கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை ஐஐடியை கண் டித்து போராட்டம் நடத்தியதன் பேரில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று ஐஜேகே தலைவர் பாரிவேந்தர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

சென்னை ஐஐடியில் டாக்டர் அம்பேத்கர், பெரியார் வாசிப்பு வட்டத்துக்கு தடை விதித்திருப்பது ஏற்புடையது அல்ல. ஐஐடி போன்ற உயர்கல்வி கற்போர் வெறும் படிப்பு மட்டும் அல்லாமல் திறன் மிகுந்த ஆய்விலும் ஈடுபடும் மாணவர்கள் ஆவார்கள்.

எனவே அவர்களுடைய அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த கருத்துகள் சமுதாயத்தில் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. எனவே அந்த மாணவர்களின் அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை திரும்பப் பெற வேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT