தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த 4-ம் தேதி ஹைன்த்மார்ஷ் பகுதி எம்பி மெட்வில்லியம்ஸ், அடிலைடு தமிழ்ச்சங்க செயல்பாடுகள் மற்றும் தமிழக முதல்வரை பாராட்டி பேசியுள்ளார்.
இதுகுறித்து அடிலைடு தமிழ்ச்சங்க தலைவர் ப.லாரன்ஸ் அண்ணாதுரை, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
''தமிழக மக்களின் நலனுக்காகவும் எதிர்கால வளர்ச்சிக்காகவும் நீங்கள் எடுத்துவரும் செயல்திட்டங்கள், தீர்மானங்கள் தமிழகம் தாண்டி வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது'' என்று அதில் கூறப்பட்டுள்ளது.