ராகுல் காந்தியின் பிறந்த நாளான ஜூன் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் பாத யாத்திரை பிரச்சாரம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தியின் பிறந்த நாள் வரும் 19-ம் தேதி வருகிறது. அதை தமிழக காங்கிரஸ் சார்பில் சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் மாலை 3 முதல் 7 மணி வரை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் அவரவர் பகுதிகளில் பாதயாத்திரை மேற்கொள்வார்கள். இந்த பாதயாத்திரையின்போது மோடி அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை மக்களிடம் விநியோகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.