தமிழகம்

திருவாரூரில் பயங்கரம்: உதவி தொடக்க கல்வி அலுவலர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை

செய்திப்பிரிவு

திருவாரூரில் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் மர்ம கும்பலால் நேற்று வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

திருவாரூர் விளமல் பெரியார் நகரைச் சேர்ந்தவர் சி.வேணு கோபால்(56). இவர், கொரடாச்சே ரியில் உதவித் தொடக்க கல்வி அலுவலராகப் பணியாற்றி வந் தார்.

இந்நிலையில், வேணுகோபால் நேற்று மாலை வீட்டிலிருந்து மோட் டார் சைக்கிளில் திருவாரூர் தியாகராஜர் கோயில் கமலால யக் குள வடகரையில் வந்து கொண்டிருந்தபோது, மர்ம கும் பல் அவரை வழிமறித்து அரிவா ளாள் வெட்டி விட்டு தப்பியோடி யது.

இதில் படுகாயமடைந்த வேணுகோபாலை அருகிலிருந்த தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, வேணுகோபாலை பரி சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருவாரூர் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து கொலை யாளிகளை தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் கூறப் படுகிறது.

SCROLL FOR NEXT