இன்று உலக ரத்ததான தினம். இதை முன்னிட்டு, தன்னார்வ ரத்ததானம் குறித்த விழிப்பு ணர்வை ஏற்படுத்தும் வகையில் குறும்படங்கள் போட்டியை அறிவித் திருக்கிறது இணைய வழியாக இலவச ரத்ததான சேவையை வழங்கி வரும் Friends2Support.Org என்ற அமைப்பு.
ரத்ததானம் செய்வதற்காக ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷெரீப் என்ற இளைஞர் 2005-ல் தொடங்கிய Friends2Support.Org என்ற இணையதளத்தில் இந்தியா முழுவதுமிருந்து இது வரை 1.75 லட்சம் பேர் ரத்த தானம் செய்வதற்காக தங்களது பெயர்களை பதிவு செய்திருக்கி றார்கள். எந்த வகை ரத்தம் தேவை என்றாலும், இந்த இணையத்தில் தேடினால் நமக்கு தேவையான ஊரிலேயே நமக்குத் தேவையான குருதி கொடையாளரை அலைபேசி எண்ணுடன் அறிந்துகொள்ள முடியும். தங்களது இணைய சேவை மூலமாக கடந்த 10 ஆண்டு களில் 3 லட்சத்துக்கும் அதிகமான வர்களுக்கு உயிர்க் கொடை அளித்திருப்பதாகச் சொல்கிறார் இணையத்தின் தமிழக ஒருங் கிணைப்பாளர் சதீஷ்குமார்.
தங்களது சேவை குறித்து இன்னும் விரிவான அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற் காக குறும்படப் போட்டி ஒன்றை உலக ரத்ததான தினமான இன்று அறிவிக்கிறது Friends2Support.Org இணையம். இது குறித்து சதீஷ் குமார் கூறியதாவது: ’’விஷுவல் மீடியா என்பது இப்போது மிகப் பெரிய தகவல் தொடர்பு சாதன மாகிவிட்டது. மேலும், படித்த இளை ஞர்கள் குறும்படம் எடுப்பதிலும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். எனவே, ரத்ததானத்தின் அவசி யத்தை விஷுவல் மீடியா மூலமாக சொன்னால் அது லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதற்காக இந்தப் போட்டியை அறிவித்திருக்கிறோம்.
ஞாயிற்றுக்கிழமை மாலை, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெறும் விழாவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுகிறோம். சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து இந்தப் போட்டியை நடத் துகிறோம். போட்டிக்கான குறும் படங்களை 3 மாத காலத்துக்குள் அனுப்பி வைக்க வேண்டும். அவை தன்னார்வ ரத்ததானம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இருக்க வேண்டும்.
போட்டியில் கலந்து கொள் ளும் படங்களில் இருந்து எங்களு டைய டெக்னீஷியன்கள் முதல் கட்டமாக 100 படங்களைத் தேர்வு செய்வார்கள். அதிலிருந்து 50 படங்களை திரைத்துறை பிரபலங் கள் தேர்வு செய்வார்கள். தேசிய ரத்ததான தினமான அக்டோபர் முதல் தேதி ஹைதராபாத்தில் நடக் கும் விழாவில் அந்த 50 படங்களி லிருந்து 15 படங்கள் சிறந்த படங்களாக தேர்வு செய்யப்படும். அதில் முதல் 3 படங்களுக்கு மெகா பரிசுகளும் எஞ்சியவைக்கு விருதுகளும் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் குறும் படங்களை திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களில் திரையிட உதவி செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் எங்களுக்கு உறுதி கொடுத்திருக்கிறது. இந்தியா வில் எங்களது சேவையை பற்றிக் கேள்விப்பட்ட நேபாளம், இலங்கை, ஏமன், பங்களாதேஷ் நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் தங்கள் நாடுகளிலும் இந்த இணைய சேவையை தொடங்க விரும்புகிறார் கள். இதையடுத்து அந்த நாடு களிலும் எங்களின் இணைய சேவையை தொடங்குகிறோம். இதற்கான தொடக்க விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.