தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது:
வாக்குஎண்ணும் பணிக்காக 39 மக்களவை தொகுதிகள் மற்றும் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு 58 மத்திய வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.
ஒவ்வொரு மேசையிலும் மத் திய அரசு ஊழியர் ஒருவர் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட் டிருப்பார். வேட்பாளர்கள், ஒரு மேசைக்கு ஒரு முகவரை நியமித்துக் கொள்ளலாம். உரிய ஆவணம் மற்றும் முறையான அனுமதி பெற்ற நபர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். வாக்கு எண்ணும் நடவடிக்கை வீடியோ படம் எடுக்கப்படும்.
வாக்கு எண்ணும் மையத்தினுள் செல்போன், ரெக்கார்டர் போன்ற மின்னணு சாதனங்களை கொண்டு செல்லக்கூடாது. ஒவ்வொரு சுற்று எண்ணிக்கை முடிந்ததும், வேட் பாளர்கள் பெற்ற வாக்குகள் விவ ரம் வெளியிடப்படும். அதன் நகல், முகவர்கள், வேட்பாளர்கள் மற் றும் தேர்தல் நடத்தும் அதிகாரிக் குத் தரப்படும். தேர்தல் முடிவினை அறிவிக்கும் முன்பாக, பார்வையா ளரின் ஒப்புதலைப் பெறவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.
மோடி தொகுதியில்..
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி நிறுவனர் அரவிந்த் கேஜ்ரிவால் போட்டியிடுகிறார். இதனால் அனைவரின் பார்வையும் அந்த தொகுதியின் மீது பதிந்துள்ளது. அங்கு பிரச்சினைகள் வெடிக்கக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அத்தொகுதிக்கு பிரவீண்குமார் சிறப்பு பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.