தமிழகம்

புகையிலை ஒழிப்பு படக் கண்காட்சி

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் கிளை பிரம்மகுமாரிகள் அமைப்பு சார்பில் உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி புகை யிலை ஒழிப்பு விழிப்புணர்வு புகைப் பட கண்காட்சி காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கண்காட்சியை காஞ்சி புரம் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: மன அழுத்தம் காரணமாக பலர் புகை பிடிக்கும் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். இதனால் பல் வேறு விதமான உடல் பாதிப்புக் கும் ஆளாகிறார்கள். இப்பழக்கத் திலிருந்து விடுபட ராஜயோக தின பயிற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அவர் பேசினார். இந்நிகழ்ச் சியில் பிரம்ம குமாரிகள் அமைப்பின் பொறுப்பாளர் அகிலா கலந்துகொண்டார்

          
SCROLL FOR NEXT