மதுராந்தகம் நகரில் வாகன உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்த இளைஞரை, 6 பேர் அடங்கிய கும்பல் நேற்று அவரது கடைக்குள்ளேயே புகுந்து வெட்டிக் கொன்றது.
காஞ்சிபுரம் மாவட்டம், கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப் பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் தயாளன் மகன் சரவணன் (30). மதுராந்தகம் நகரில் உள்ள முருகன் கோயில் தெருவில் ஆட்டோ, பைக் உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்தி வந்தார்.
சரவணன், நேற்று கடையில் இருந்தார். அப்போது, காரில் வந்திறங்கிய 6 பேர் அடங்கிய அடையாளம் தெரியாத கும்பல், சட்டென்று கடைக்குள் புகுந்து சரவணனை சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிச் சென்று விட்டது. நாற்காலியில் அமர்ந் திருந்த நிலையிலேயே சரவணன் இறந்துவிட்டார்.
தகவலறிந்த மதுராந்தகம் போலீஸார், விரைந்து வந்து சடலத்தை எடுத்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி னர். மாவட்ட எஸ்பி விஜயகுமார், சம்பவ இடத்தை பார்வையிட்டார்.
பழிக்குப் பழி?
2014-ல் ஊரப்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவர் ஊகோ. பெருமாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் 9-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்தவர் சரவணன். இந்த நிலையில், அவர் கொலை செய்யப்பட்டதால், பெருமாள் கொலைக்கு பழித்தீர்க்கவே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதுதொடர்பாக எஸ்பி விஜயகுமார் கூறும்போது, ‘ஊரப் பாக்கம் ஊராட்சி மன்றத் தலை வர் கொலை வழக்கில் சரவணன் கைது செய்யப்பட்டார். எனவே, அந்தக் கொலைக்கு பழிதீர்க் கவே சரவணன் கொலை செய்யப் பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப் படுகிறது. கொலையாளிகளைப் பிடிக்க மதுராந்தகம் டிஎஸ்பி தலை மையில் காவல் ஆய்வாளர்கள் 3 பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.
சரண்
இந்த கொலை வழக்கு தொடர்பாக ஊரப்பாக்கம் மற்றும் காரணைபுதுச்சேரி பகுதிகளைச் சேர்ந்த கிருபாகரன் (26), கார்த்திக் (27), நிவேக் (26), டேவிட் (26), விஜய் (26), அருள் குமார்(26) ஆகிய 6 பேர் சைதாப்பேட்டை குற்றவியல் 18-வது நீதிமன்றத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்கள் அனைவரையும் 13 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.