தமிழகம்

இடைத்தேர்தலை தவிர்க்க நியமன உறுப்பினர் முறை: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

செய்திப்பிரிவு

இடைத்தேர்தலை தவிர்க்க நியமன உறுப்பினர் முறையை கொண்டு வரவேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

பாமக சார்பில் ‘உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதியின் வெற்றி நிச்சயம்’ என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, ‘பாமகவுக்கு ஆட்சி வாய்ப்பு வழங்கினால் கல்வி, விவசாயம், சுகாதாரம் ஆகிய வற்றில் வியக்கத்தக்க வளர்ச்சியை காணமுடியும். ராமதாஸ் தினந் தோறும் அறிக்கைகள் வெளி யிட்டு வருகிறார். அதற்கு திராவிட கட்சிகள் தாமதமாக கண்டனங் களை தெரிவிக்கின்றன. டெல்லி யைப்போல தமிழகத்திலும் இளைஞர்கள் எழுச்சியின் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்’ என்றார்.

பின்னர், பத்திரிகையாளர் களை சந்தித்த அவர், ‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தலால் கால விரயமும், அரசுப் பணிகளுக்கு தடையும் ஏற்பட்டுள்ளது.

இவற்றை போக்க முந்தைய தேர்தலில் வெற்றிபெற்ற கட்சி உறுப்பினர் ஓருவரை நியமன உறுப்பினராக நியமிக்கும் சட்டம் திருத்தம் வரும் காலங் களில் செய்ய வேண்டும். மேலை நாடுகளில் உள்ளது போல் பொதுதேர்தல் விவாதங்களால் மட்டுமே, சிறந்த ஆட்சியை மக்கள் தேர்வு செய்வார்கள் என தெரிவித்தார்.

முன்னதாக பொதுக்கூட்டத் துக்கு மாவட்ட செயலாளர் மகேஷ் குமார் தலைமை தாங்கி னார். மாநில துணைபொது செயலாளர் பொன்.கங்காதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT