திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடந்த மக்கள் குறை தீர் கூட்டத்தில் பட்டா கோரி 79 மனுக்கள், ஓய்வூதியம் கோரி 59 மனுக்கள், வேலைவாய்ப்புக் கோரி 17 மனுக்கள், குடும்ப அட்டை கோரி 18 மனுக்கள் மற்றும் இதர உதவிகள் கோரி 99 மனுக்கள் என 272 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்களைப் பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அதன் மீது விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.
பின்னர் மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் 20 பேருக்கு 3 சக்கர சைக்கிள்களை வழங்கினார். மேலும் ஆரணி பேரூராட்சியில் கருணை அடிப்படையில் பதிவறை எழுத்தருக்கான பணி நியமன ஆணை மற்றும் 6 பேருக்கு புதிய குடும்ப அட்டைகளையும் அப்போது அவர் வழங்கினார்.