தமிழகம்

இறால் பண்ணை கழிவுகளால் மரக்காணத்தில் பலியாகும் பறவைகள்

செய்திப்பிரிவு

இறால் பண்ணையில் இருந்து கழிவுகள் வெளியேறி நீர் நிலைகளில் கலப்பதால் பறவை இனங்கள் உயிரிழந்து வருகின்றன.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பேரூராட்சிக்குட்ட பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை முறையாக அரசிடம் அனுமதி பெறாமல் இயங்குவதாக கூறப் படுகிறது. இதற்கு வருவாய் மற்றும் மின்சார துறையினர் உடந்தையாக உள்ளனர்.

இந்த நிலையில், இங்குள்ள இறால் பண்ணைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரால் விவசாய நிலங்கள் அனைத் தும் உவர் நிலங்களாக மாறி விட்டதாக விவசாயிகள் குற்றஞ் சாட்டு கின்றனர். இதுபோல விவசாய நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் குளங்களிலும் இறால் பண்னை கழிவு நீர் கலப்பதால் அங்குள்ள தண்ணீர் மாசுபட்டு உள்ளது. எனவே, இங்குள்ள இறால் பண்ணை களை அகற்றுமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு பல்வேறு புகார் மனுக்களை விவசாயிகள், பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில், மரக்கணம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள குளம் மற்றும் குட்டைகளில் இருக் கும் மாசடைந்த தண்ணீரால் அதில் உள்ள மீன்கள் இறந்து விடுகின்றன. நீர்நிலைகளிலேயே மிதக்கின்றன. இதுபோன்று உயிரிழந்த மற்றும் உயிருடன் இருக்கும் மீன்களை சாப்பிடும் பறவை இனங்களும் உயிரிழக்கின்றன. அதில், அரிய வகை வெளிநாட்டு பறவை இனங் களும் உயிரிழந்து கிடப்பதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது குறித்து உடனடியாக நட வடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

இறந்து போன மீன்களை சாப்பிட்டதால் குளத்தின் கரையில் இறந்து கிடக்கும் வெளிநாட்டு பறவைகள்.

SCROLL FOR NEXT