குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வழங்காதது உள்ளிட்ட விவசாயிகள் பிரச்சினைகளை கண்டித்து தேமுதிக சார்பில் அதன் தலைவர் விஜயகாந்த் தலைமையில் திருவாரூரில் வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கவுள்ளது.
இது தொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் வெளி யிட்ட அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
குறுவை சாகுபடிக்காக ஜுன் 12-ம் தேதி மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடவில்லை. விவசாயிகளுக்கு தொடர்ந்து அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, அவற்றை கண்டித்து தேமுதிக சார்பில் திருவாரூரில் வரும் 29-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப் பாட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கவுள்ளார். இதில் தேமுதிக வினர், டெல்டா விவசாயிகள், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.