தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்தார். கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் நடக்கவுள்ள கருத்தரங்கில் கலந்துகொள்ள அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வரும் ஜுன் 9-ம் தேதி கருத்தரங்கு நடக்கவுள்ளது. இந்த கருத்தரங்குக்கு திமுக, அதிமுக, பாமக, பாஜக தவிர மற்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், சிபிஎம் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரை திருமாவளவன் நேற்று முன்தினம் சந்தித்தார்.
இந்த சூழலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அவரது கோயம்பேடு அலுவலகத்தில் தொல். திருமாவளவன் நேற்று காலை சந்தித்தார். இந்த சந்திப் பின்போது, விசிக பொதுச் செயலாளர் ரவிக்குமார், பொரு ளாளர் முகமது யூசுப், செய்தி தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அதிகாரத்தில் பங்கு
இந்த சந்திப்பு பற்றி திருமாவள வன் கூறும்போது, “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை முன்மொழி கிற விதமாக வரும் 9-ம் தேதி கருத்தரங்கு ஒன்றினை நடத்த வுள்ளோம். அதற்கு விஜயகாந்தை அழைக்க வந்தேன். விளிம்பு நிலை மக்களுக்கும் ஆட்சி அதிகாரத் தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது” என்றார்.
வைகோவுக்கு அழைப்பு
பின்னர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சென்னையிலுள்ள மதிமுக அலுவலகத்தில் நேற்று மாலை சந்தித்த திருமாவளவன், கருத்தரங்கில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்தார்.