சவீதா பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டுக்கான 2-ம் கட்ட மருத்துவக் கவுன்சலிங் கடந்த திங்கள்கிழமையுடன் நிறை வடைந்தது.
இது தொடர்பாக அந்த பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
சவீதா மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அந்த பட்டியலின்படி மாணவர் களை தேர்வு செய்யும் 2-ம் கட்ட கவுன்சலிங் கடந்த திங்கள் கிழமையுடன் நிறைவடைந்தது. மாணவர்கள் சேர்க்கையின்போது பல்கலைக் கழக வேந்தர் என்.எம்.வீரய்யன், துணை வேந்தர் மைதிலி பாஸ்கரன், பதிவாளர் பிரபாவதி, இயக்குநர் தீபக் நல்லசுவாமி ஆகியோர் இருந்தனர்.
பல்கலைக்கழக வேந்தர் கூறும்போது, இந்த பல்கலைக் கழகத்தில் மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ளது. நாங்கள் எவ்வளவோ எச்சரிக்கை விடுத்திருந்த நிலையிலும் சிலர் இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். இடம் வாங்கித் தருவதாக ஏமாற்ற நினைப்பவர்களிடம் கவனமாக இருங்கள்” என்று கூறினார்.
பெற்றோர் கருத்து
சில பெற்றோர் கருத்து கூறுகையில், “மாணவர் சேர்க் கையின்போது மாணவர்களின் பகுப்பாய்வுத் திறன், தொடர்புகொள்ளும் திறன் உள்ளிட்ட பல்வேறு திறமைகள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் மாணவர்கள், பெற்றோர் ஆகியோருடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. என்றனர்.