நாளை (ஜூலை 1) முதல் கட்டாய ஹெல்மெட் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேனர்கள் வைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
தமிழகத்தில் நாளை (ஜூலை 1) முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும். ஓட்டுநர் உரிமம், ஆர்.சி.புக், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்களும் பறிமுதல் செய்யப்படும். அபராதம் விதிக்கும் போலீஸாரை எதிர்த்து பேசுதல் போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் இந்த அபராதத் தொகை அதிகரிக்கப் படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் விழிப்புணர்வை ஏற்படுத்த, போலீஸார் எடுத்த நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பல விழிப்புணர்வு நடவடிக்கைகளில் போலீஸார் இறங்கியுள்ளனர். ஹெல்மெட் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்வது, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து விழிப் புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடத்து வது, கல்லூரி மற்றும் பள்ளி களுக்கு சென்று ஹெல்மெட் அணிவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்குவது என பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள் ளனர்.
முக்கிய சாலைகளில் வாகன ஓட்டிகளின் கண்களில் எளிதில் படும் வகையில் 5 ஆயிரம் இடங் களில் விழிப்புணர்வு பேனர்களை வைக்கவும் தமிழக போலீஸார் முடிவு செய்துள்ளனர். இதில் சென்னையில் மட்டும் ஆயிரம் இடங் களில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை போக்குவரத்து போலீஸார் செய்து வருகின்றனர்.