தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் புகார் விவரங்களை பொதுமக்கள் பார்க்க வசதி: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் கட்சியினர் தெரிவிக்கும் புகார்கள், நடவடிக்கை தொடர்பான தகவல்களை பொதுமக்கள் பார்க்கும் வசதி செய்யப் பட்டுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக் கிறது. தேர்தலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், களத்தில் உள்ள வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘இ-நேத்ரா’

இதற்கிடையில், தேர்தல் தொடர்பான புகார்களை ஒருங்கிணைக்கவும் உடனடி தீர்வு காணவும் ‘இ-நேத்ரா’ முறையை தேர்தல்ஆணையம் அறிமுகப்படுத்தி யது. நாட்டில் முதல் முறையாக அறி முகப்படுத்தப்பட்டுள்ள இதில், கைபேசி, இ-மெயில், கடிதம், நேரில் புகார் அளிப் பது உள்ளிட்ட 6 வகைகளில் புகார் அளிக்கும் வசதி உள்ளது. நேரில் புகார் அளிக்க, ஆர்கே நகர் தொகுதியில் 7 மையங்கள் மற்றும் தலைமைச் செய லகத்தில் உள்ள தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தி்ல் புகார் மையங் கள் அமைக்கப்பட்டுள்ளன. புகார்களை பெற்றுக்கொண்டு உடனடியாக அதற் கான பதிவு விவரமும் புகார்தாரருக்கு அளிக்கும் வசதியும் தற்போது செய் யப்பட்டுள்ளது.

தகவல்கள் பெற..

பொதுமக்களிடையே நேர்மையான முறையில் தேர்தல் நடப்பதை உறுதி செய்யும் வகையில், புகார்கள் அவற்றிற் கான நடவடிக்கைகளை அவர்கள் பார்க்க வசதியும் செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கைகள்

இதன் மூலம் புதிய புகார்களை பதிவு செய்யவும், பதிவு செய்த புகார்கள் மீதான நடவடிக்கைகள் குறித்தும் தகவல்கள் பெற முடியும்.

பொதுமக்கள் http://117.239.180.151/ECPublic http://rknagarbyelection.enetra.in என்ற இணையதள இணைப்பில் புகார்கள் குறித்த தகவல்களை அறியலாம்.

இத்தகவல்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப்சக்சேனா தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT