தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணி யாற்றி ஓய்வு பெற்றவர் கவிஞர் செம்போடை வெ.குணசேக ரன். இவர் ஏராளமான குழந் தைப் பாடல்கள் மற்றும் சிறுவர் கதைகளை எழுதியுள்ளார். இவற்றை தொகுத்து நேர்மைக் குக் கிடைத்த பரிசு’, பிஞ்சு நிலாவே! கொஞ்ச வா!’, என் மன வானில்’ ஆகிய 3 நூல்களை எழுதியுள்ளார்.
இவரது மனைவி கவிஞர் மயிலை மா.சந்திரா இராமா யணத்தில் மானிடரல்லாத பேரன்பர்கள்’ என்ற தலைப்பில் ஆய்வு நூல் ஒன்றை எழுதி யுள்ளார். இந்த நான்கு நூல் களின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடை பெற்றது. இந்த விழாவுக்கு தமிழக முன்னாள் காவல்துறை இயக்குநர் சு.குமாரசாமி தலைமை வகித்தார்.
இந்த விழாவில், மாநில அளவில் முதலிடம் பெற்ற கண்பார்வையற்ற இரண்டு மாணவிகள் மற்றும் சிறந்த 10 மாணவர்களைப் பாராட்டி கவிஞர் குணசேகரன் ஒரு லட்சம் ரூபாயை ஊக்கத் தொகையாக வழங்கினார்.