சென்னை ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவளிக்க உள்ளதாக திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டம் தஞ்சாவூரில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியதாவது: பண பலம், அதிகார பலம், ஆள் பலம் என அனைத்தையும் எதிர்கொள்ளும் துணிச்சலோடு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தனது வேட்பாளராக சி.மகேந்திரனை போட்டியிட வைத்திருப்பதை வரவேற்கிறோம்.
இந்த இடைத்தேர்தலில் சாதி வெறி, மத வெறி, தீண்டாமை, மூட நம்பிக்கை, இந்துத்துவா கொள்கை போன்றவற்றுக்கு எதிராகவும், திராவிடர் கழகத்தின் கொள்கைக்கு நெருக்கமாகவும் செயல்பட்டு வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிப்பது என பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட் டுள்ளது. சி.மகேந்திரனுக்கு ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார் வீரமணி.
இந்திய கம்யூனிஸ்ட் நன்றி
இடைத்தேர்தலில் போட்டியி டும் சி.மகேந்திரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ள திராவிடர் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் நன்றி தெரிவித்துள்ளார்.