தமிழகம்

முன்னாள் நீதியரசர் சந்துரு நூல்: ‘இந்து’ என்.ராம் வெளியிடுகிறார்

செய்திப்பிரிவு

முன்னாள் நீதியரசர் சந்துரு எழுதிய “அம்பேத்கார் ஒளியில் எனது தீர்ப்புகள்” எனும் நூல் வெளியாக உள்ளது.

மணற்கேணி பதிப்பகம் இந்த நூலை வெளியிடுகிறது. தேனாம் பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் வரும் வெள்ளிக் கிழமை (09.05.2014) மாலை 6 மணிக்கு இந்த நூலின் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையேற்க உள்ளார்.ரவிக்குமார் அறிமுகவுரை வழங்குகிறார்.

இந்த நூலை பத்திரிகையாளர் ‘இந்து’ என்.ராம் வெளியிடுகிறார். பேராசிரியர் பா.கல்யாணி பெற்றுக் கொள்கிறார். பத்திரிகையாளர் ஞாநி வாழ்த்திப் பேச உள்ளார்.

நிறைவாக முன்னாள் நீதியரசரும், நூலாசிரியருமான கே.சந்துரு ஏற்புரை வழங்க உள்ளார்.

SCROLL FOR NEXT