கடம்பத்தூர் அருகே உள்ள பிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில்நாதன் (37). இவர், திருவள்ளூர் அருகே மெய்யூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் சூப்பர்வைசராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில், செந்தில் நாதன், மது விற்பனை தொகை யான ரூ.1,75,178 பணத்தை திருவள்ளூரில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக தனது மோட் டார் சைக்கிளில் நேற்று காலை சென்று கொண்டி ருந்தார். மேலானூர் பேருந்து நிலையம் அருகே சென்ற போது, ஹெல் மேட் அணிந்தபடி மோட்டார் சைக்கி ளில் வந்த 2 மர்ம நபர்கள், கத்தியை காட்டி மிரட்டி, செந்தில் நாதனிடம் இருந்த பணத்தை பறித்துச் சென்றனர்.புகாரின் பேரில் வெங்கல் போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.