தமிழகம்

இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் முற்றுகை

செய்திப்பிரிவு

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தின் எரிவாயு நிரப்பும் மையம் செயல் பட்டு வருகிறது. இங்கு 70 பேர் ஒப்பந்த தொழிலாளர்களாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகின்றனர். இந்த ஒப்பந்த ஊழியர்களுக்கு சட்டப் படியான ஊதியம், வார விடுப்பு மற்றும் கழிவறை வசதி போன்ற வற்றை செய்து தரவில்லை என தொழிலாளர்கள் குற்றம்சாட்டு கின்றனர்.

இந்நிலையில், தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தர வலியுறுத்தி ஒப்பந்த தொழிலா ளர்கள் நேற்று இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேசன் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில், தமிழ்நாடு ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச் செயலாளர் ரவி, ஏஐடியுசி மாநில துணை தலைவர் ஏ.எஸ். கண்ணன் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிர்வாகத்தினர், தொழிலாளர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். காவல்துறை அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்த இந்த பேச்சுவார்த்தையில், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி யளிக்கப்பட்டது. இதையடுத்து முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

SCROLL FOR NEXT