தமிழகம்

வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன், ரூ. 4 லட்சம் திருட்டு: மருத்துவ செலவுக்கு வைத்திருந்த பணம்

செய்திப்பிரிவு

மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து 40 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பணம் திருடப்பட்டது.

சென்னை மாங்காடு பரணிபுத்தூர் பி.பி.சித்தன் நகரில் வசிப்பவர் சிவகுமார். மருந்து விற்பனை பிரதிநிதி. இவரது மனைவி சித்ரா. சிவகுமாரின் தந்தை உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அவரைப் பார்ப் பதற்காக நேற்று முன்தினம் காலையில் சிவகுமாரும், சித்ரா வும் சென்றுவிட்டனர். மாலையில் வீட்டுக்கு வந்தபோது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறக்கப் பட்டிருந்தது. வீட்டினுள் பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன.

பீரோவில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.4 லட்சம் பணம் திருடப்பட்டிருந்தன. தந்தையின் மருத்துவ செலவுக்காக கடன் வாங்கி அந்த பணத்தை வைத்திருந்தார் சிவகுமார். அந்த பணத்தைத் தான் திருடிச் சென்றுள்ள னர். இந்த திருட்டு குறித்து மாங்காடு காவல் நிலையத்தில் சிவகுமார் புகார் அளித்துள்ளார். போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸார் சந்தேகம்

சிவகுமார் வீட்டின் ஒரு பகுதியில் வீட்டு வேலைகள் நடந்து வருகின்றன. இந்த வேலைக்கு பயன்படுத்தப்படும் கடப்பாரை கம்பியாலேயே கொள்ளையர்கள் பூட்டை உடைத்துள்ளனர்.

எனவே வீடு கட்டும் பணியில் ஈடுபட்டிருக்கும் கட்டிட தொழிலாளர்கள் இந்த திருட் டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் போலீஸார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு வீட்டில் திருட்டு

மாதவரத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 25 பவுன் நகை திருடு போனது.

மாதவரம் பால் பண்ணை இந்திரா நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி. ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். பொன்னேரியில் உள்ள உறவினரின் வீட்டுக்கு நேற்று முன்தினம் காலையில் சென்றுவிட்டு இரவில் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டிருந்தன. பீரோவில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் பொருட்கள் திருடப்பட்டிருந்தன.

இது குறித்து கொடுங்கை யூர் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT