சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து டிராபிக் ராமசாமி வெளியேற்றப்பட்டார்.
ஆர்.கே.நகர் சட்டப்பேரவை தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 17 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகிறது.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கேமராவுடன் வந்ததாகக் கூறி டிராபிக் ராமசாமி வெளியேற்றப்பட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் பத்திரிகையாளர்களை போலீஸார் அனுமதிக்க மறுக்கின்றனர். அராஜகப் போக்கை கடைபிடிக்கின்றனர். இதனை எதிர்த்து நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன்" என்றார்.