தமிழகம்

ஸ்பீக்கரில் மறைத்து வைத்து தங்கம் கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல்

செய்திப்பிரிவு

சென்னை விமானநிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து ஸ்பீக்கரில் மறைத்து வைத்திருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசியாவில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்த பயணியிடம் சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் விசாரணை மேற்கொண்டனர்.

அவரிடம் இருந்த ஸ்பீக்கரை வாங்கி அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். ஸ்பீக்கரில் 900 கிராம் எடையளவில் தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், அந்த நபர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியைச் சேர்ந்த முகமது பரூக் என்பது தெரியவந்தது.

SCROLL FOR NEXT