ரயில்களின் புதிய கால அட்டவணை வரும் அக்டோபர் 1-ம் தேதி அறிவிக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் ரயில்களின் கால அட்டவணை தயாரித்து தெற்கு ரயில்வே அறிவிக்கிறது. அறிவிக்கும்போது ரயில்களின் நேரம் மாற்றம், புதிய ரயில்களுக்கு நேரம் நிர்ணயம், சில ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை கொண்டு தயாரிக்கப்படுவது வழக்க மாக இருக்கிறது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே நேற்று வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தெற்கு ரயில்வே தற்போதுள்ள கால அட்டவணையை செப்டம்பர் 30-ம் தேதி வரை யில் நீடிக்க உத்தரவிட்டுள்ளது. அக்டோபர் 1-ம் தேதி முதல் புதிய கால அட்டவணையை வெளியிட முடிவு செய்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.