நெம்மேலி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இன்று பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், குடிநீர் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நெம்மேலியில் உள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் தினமும் 100 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட கடல் நீர் குடிநீராக்கப்படு கிறது. இந்த நிலையத்தில் மாதாந் திர முழு நாள் மின் தடை மற்றும் சில முக்கியமான பராமரிப்பு பணிகள் 10-ம் தேதி (இன்று) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடை பெற உள்ளதால் திருவான்மியூர், கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, அடையார், வேளச் சேரி, பெசன்ட் நகர், சோழிங்க நல்லூர், ஈ.சி.ஆர், நீலாங்கரை போன்ற பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொதுமக் கள் குடிநீர் பெறுவதில் சிரமம் ஏற் பட்டால், 8144930913, 8144930914, 8144930915 என்ற எண்ணில் பகுதிப் பொறியாளர்களை தொடர்பு கொள்ளவும். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.