தமிழகம்

பத்தாம் வகுப்பு அறிவியலில் 69,560 பேர் சதமடித்து சாதனை

செய்திப்பிரிவு

பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தில் 69,560 பேர் சதமடித்து சாதனை படைத்தனர். சமூக அறிவியல் பாடத்தில் 26,554 பேரும், கணிதத்தில் 18,682 பேரும் சதமடித்தனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு இன்று காலை வெளியிடப்பட்டது. இத்தேர்வில் கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக அளவில் மாணவ, மாணவிகள் முழு மதிப்பெண் பெற்றுள்ளனர்.

பாடவாரியாக 100-க்கு 100 மதிப்பெண் பெற்று சாதித்தவர்களின் எண்ணிக்கை:

மொழிப் பாடம் - 255

ஆங்கிலம் - 677

கணிதம் - 18,682

அறிவியல் - 69,560

சமூக அறிவியல் - 26,554

SCROLL FOR NEXT