தமிழகம்

யுஜிசி நெட் தகுதித்தேர்வுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு: சிபிஎஸ்இ அறிவிப்பு

செய்திப்பிரிவு

கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான யுஜிசி ‘நெட்’ தகுதித்தேர்வு ஜூன் 28-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு சிபிஎஸ்இ இணையதளத்தில் (www.cbsenet.nic.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் இருந்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அனுமதிச்சீட்டு தபாலில் அனுப்பப்படாது.

மேலும், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற யுஜிசி ‘நெட்’ தேர்வை எழுதியவர்கள் விடைத்தாள் நகல் பெற விண்ணப்பிக்கலாம். கட்டணம் ரூ.500. இதற்கு ஜூலை 20-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

SCROLL FOR NEXT