தமிழகத்தில் மின் பற்றாக்குறை காலம் போய், மின் மிகை காலம் வந்துள்ளது. உற்பத்தியைவிட தேவை குறைந்ததை தொடர்ந்து தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 200 மெகாவாட் மின் உற்பத்தி குறைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான மின் பற்றாக்குறை நிலவி வந்தது. மாநிலத்தின் மின் தேவையை விட உற்பத்தி சுமார் 3 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு குறைவாக இருந்தது. இதனால் தினமும் 5 மணி நேரத்துக்கும் அதிகமாக மின்வெட்டு அமல்படுத்தப்பட்டது.
ஆனால் இந்த ஆண்டு நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் உள்ளிட்ட சில புதிய மின் திட்டங் களில் மின் உற்பத்தி தொடங்கி யிருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவக் காற்று பலமாக வீசி வருகிறது. இதனால் தமிழக தென்மாவட்டங் களில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உற்பத்தியை விட மின் தேவை குறைந்துள்ளது. இதனால் அரசு மின் உற்பத்தி நிலையங்களில் மின் உற்பத்தி யை குறைக்குமாறு அரசு அறிவுறுத் தியுள்ளது.
அந்த வகையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 200 மெகா வாட் அளவுக்கு மின் உற்பத் தியை குறைக்க அரசு அறிவுறுத்தி யுள்ளது.
இந்த அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் மூலம் 1,050 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 200 மெகாவாட் அளவுக்கு மின் உற்பத்தியைக் குறைக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி மின் உற்பத்தி அளவு குறைக்கப்பட்டு, தற்போது சரா சரியாக 850 மெகாவாட் அள வுக்கே மின் உற்பத்தி இருப்பதாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.