சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று பிற்பகல் 3 மணிக்கு முடிவடைந்தது.
கடந்த 3-ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது.
மனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் 13-ம் தேதி ஆகும். 27-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. ஜூன் 30ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
அதிமுக சார்பில் ஜெயலலிதாவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரனும், சுயேட்சை வேட்பாளராக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.