தமிழகம்

மாயமான டார்னியர் விமானத்திலிருந்து சிக்னல் கிடைத்தது: கடலோர காவற்படை

பிடிஐ

மாயமான கடலோரப் பாதுகாப்புப் படையின் ‘டார்னியர்’ ரக விமானத்தில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாக கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

புதுச்சேரி கடல் பகுதியில் ரோந்து சென்ற கடலோரப் பாதுகாப்புப் படையின் ‘டார்னியர்’ ரக விமானம் கடந்த 8-ம் தேதி இரவு 3 வீரர்களுடன் மாயமானது. கடலோரக் காவல்படை, கடற்படை ஆகியவை இணைந்து 12 ரோந்துக் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் விமானம் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில், மாயமான கடலோரப் பாதுகாப்புப் படையின் ‘டார்னியர்’ ரக விமானத்தில் இருந்து சிக்னல் கிடைத்துள்ளதாக கடலோர காவற்படை தெரிவித்துள்ளது.

தேடுதலில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்குச் சொந்தமான சந்தயாக் கப்பல் மாயமான ‘டார்னியர்’ ரக விமானத்தின் சிக்னல்களைக் கண்டறிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடற்பரப்பில் எண்ணெய் படலம் கண்டுபிடிக்கப்பட்து.. அது டார்னியர் விமானத்திலிருந்து சிந்தியதா எனக் கண்டறிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT