ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் நடத்தும் இரண்டாம் ஆண்டு சிறுகதைப் போட்டிக்கு விருப்பமுள்ளவர்கள் சிறுகதைகளை அனுப்பலாம். கதைகளை அனுப்ப ஜூலை 25-ம் தேதி கடைசியாகும்.
இது தொடர்பாக ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் மேலாளர் சுவாமி விமூர்த்தானந்தர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்றைய அவசர உலகில் சமுதாய முன்னேற்றம் தொடர் பான கருத்துகளை பரப்ப சிறு கதைகள் பெரிதும் பொருத்த மானவை. எனவே, ஸ்ரீராம கிருஷ்ண விஜயம் முதல்முறை யாக கடந்த ஆண்டு சிறுகதைப் போட்டியை நடத்தியது. இதில், சுமார் 1000 சிறுகதைகள் போட்டிக்கு குவிந்தன. அதன்படி, 2-வது வருடமாக சிறுகதைப் போட்டி நடத்தப்படுகிறது. நமது பாரம்பரியம், தியாகம், நன்மையின் சக்தியில் நம்பிக்கை, தைரியம், கருணை, குடும்ப உறவுகளின் சரியான புரிதல், தெய்வபக்தி, தேசபக்தி போன்ற சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் மீதான சிறுகதைகள் வரவேற்கப்படுகின்றன. எழுத்தாளர்கள் அனைவரையும் இதில், பங்கேற்க அழைக்கிறோம். அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
சிறுகதை வெள்ளைத் தாளில் ஒரு பக்கத்தில் மட்டுமே எழுத வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண விஜயத்தில் 3 பக்கங்களுக்குள் சிறுகதைகள் இருக்க வேண்டும். கதைகளை தபாலிலோ, இ-மெயிலிலோ அனுப்பலாம். இணையதளத்தில் ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டவற்றை ஏற்க இயலாது.
சொந்த கற்பனைதான் என்பதற்கு உறுதிமொழி கடிதம் வேண்டும். ஸ்ரீராமகிருஷ்ண விஜயம் சிறுகதைப் போட்டி என்று குறிப்பிட்டு sriramakrishnavijayam@gmail.com என்ற முகவரிக்கு யுனிகோடு எழுத்துருவில் அனுப்பவும். கதைகளை அனுப்ப ஜூலை 25-ம் தேதி கடைசிநாள். தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளுக்கு செப்டம்பர் 11-ம் தேதி பரிசுகள் வழங்கப்படும். முதல் பரிசு ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.8 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.6 ஆயிரம், 5 ஊக்க பரிசுகள் ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும்.
இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.