தமிழகம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல்: அரசியல் கட்சிகளின் பூத்களில் உணவுப் பொருட்கள் வழங்க தடை- மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

செய்திப்பிரிவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது அரசியல் கட்சிகள் அமைக்கும் பூத்களில் உணவுப் பொருட்கள் வழங்கக் கூடாது என்று மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளராக அல்லாத அனைத்து அரசியல் கட்சியினரும் தொகுதியை விட்டு 25-ம் தேதி (இன்று) மாலை 5 மணிக்குள் வெளியேற வேண்டும். பிரச்சாரத் துக்கு வழங்கப்பட்ட அனைத்து வாகன அனுமதிகளும் தானாகவே காலாவதி ஆகிவிடும்.

தொகுதியில் மாலை 5 மணிக்குமேல் தேர்தல் தொடர்பான கூட்டம், ஊர்வலம், இசை விழா, திரையரங்க வெளியீடுகள், விளம்பரங்கள் போன்றவற்றை மேற்கொள்ளக் கூடாது. இவற்றை மீறினால் 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும்.

தேர்தல் தினத்தன்று வேட்பாளர், அவரது முகவர் மற்றும் தொண்டர்களுக்கு என 3 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி பெற உரிமையுண்டு. வாக்காளர்களை வாகனங்களில் ஏற்றி வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.

வேட்பாளரின் கட்சியைச் சேர்ந்தவர்கள், தங்களது தற்காலிக ‘பூத்’களை வாக்குச்சாவடியில் இருந்து 200 மீட்டருக்கு அப்பால் அமைக்க வேண்டும். அவற்றில் அப்பகுதியை சேர்ந்த, குற்றப்பின்னணி இல்லாத, வாக்காளராக உள்ள நபர் மட்டுமே பணிபுரிய வேண்டும். ‘பூத்’களில் உணவுப் பொருட்கள் எதுவும் வழங்கக் கூடாது.

இவ்வாறு விக்ரம் கபூர் தெரிவித்துள்ளார்.

டாஸ்மாக் கடைகள் மூடல்

சென்னை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் 27-ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 30-ம் தேதி முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாவட்டத்தில் இன்று மாலை 5 மணி முதல் 27-ம் தேதி வரை நள்ளிரவு 12 மணி வரையும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நாளான 30-ம் தேதி முழுவதும் அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள், கிளப்கள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும்

SCROLL FOR NEXT