தமிழகம்

விநாயகர் கோயிலில் 4-வது முறை உண்டியல் பணம் திருட்டு

செய்திப்பிரிவு

தாம்பரத்தில் விநாயகர் கோயிலில் 4-வது முறையாக உண்டியல் பணத்தை திருடி சென்றுவிட்டனர்.

சென்னை தாம்பரம் பழைய பாரத ஸ்டேட் வங்கி காலனியில் அருள் தந்த விநாயகர் கோயில் உள்ளது. நேற்று காலை பட்டம்மாள்(70) என்பவர் கோயிலை சுத்தம் செய்ய வந்தபோது, உண்டியல் உடைந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதிலிருந்த சுமார் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்றுவிட்டனர். தாம்பரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் வந்து தடயங்களை சேகரித்தனர்.

கடந்த 2 ஆண்டுகளில் 4 முறை இந்த கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

SCROLL FOR NEXT