தமிழகம்

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: மனுத் தாக்கல் இன்று முடிகிறது - இதுவரை 37 பேர் மனு

செய்திப்பிரிவு

சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் (ஆர்.கே.நகர்) சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. அதிமுக சார்பில் போட்டியிடும் முதல்வர் ஜெயலலிதா 5-ம் தேதி வேட்புமனுவை தாக்கல் செய்தார். மாற்று வேட்பாளராக அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் மனுத் தாக்கல் செய்தார்.

முன்னதாக, மனுத் தாக்கல் தொடங்கிய அன்று டிராஃபிக் ராமசாமி, பத்மராஜன் உட்பட 5 பேரும், 5-ம் தேதி 10 பேரும், 6-ம் தேதி சசிபெருமாள் உட்பட 7 பேரும், 8-ம் தேதி 4 பேரும் மனுத் தாக்கல் செய்தனர். 4, 7-ம் தேதிகளில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், இந்திய மக்கள் கட்சி சார்பில் ஆர்.ஆபிரஹாம் ராஜாமோகன், கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சி.மகேந்திரன், மாற்று வேட்பாளராக எம்.எஸ்.மூர்த்தி, அகில பாரத இந்து மகா சபா சார்பில் என்.குமார், சுயேச்சை வேட்பாளர்களாக தருமபுரி பி.என்.ராமச்சந்திரன், வழக்கறிஞர் எம்.எல்.ரவி, கொடுங் கையூர் பி.பொன்ராஜ், பெரவள் ளூர் சி.மகாராஜன், வியாசர்பாடி எம்.கோபி, கொடுங்கையூர் வி.துரைவேல், திருவண்ணாமலை எம்.துரைராஜ் என 11 பேர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.

இதுவரை 2 வேட்பாளர்கள் 2 மனுக்களை தாக்கல் செய்துள்ள தால், 37 பேரிடம் இருந்து மொத்தம் 39 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன. வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிகிறது. மனுக்கள் பரிசீலனை நாளை (11-ம் தேதி) நடக்கிறது. மனுக் களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் 13-ம் தேதியாகும்.

SCROLL FOR NEXT