தமிழகம்

பெண்களின் பிரச்சினை தீரும் என்றால் கட்டாயம் மதுவிலக்கை அமல்படுத்துவார் ஜெயலலிதா: நடிகை விந்தியா உறுதி

குள.சண்முகசுந்தரம்

பெண்களின் பிரச்சினை தீரும் என்றால் தமிழகத்தில் கட்டாயம் மதுவிலக்கை ஜெயலலிதா அமல்படுத்துவார் என்று அதிமுக-வின் நட்சத்திரப் பேச்சாளர் நடிகை விந்தியா தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாராகிக் கொண் டிருந்த விந்தியா ’தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி:

அதிமுக-வுக்கும் பாஜக-வுக்கும் இடையில் மறைமுகமான தோழமை இழையோடுவதாக கூறப்படுவது பற்றி..?

எதையும் மறைந்திருந்து சாதிக்க வேண்டிய கட்டாயம் அதிமுக-வுக்கு இல்லை. நாங்கள் பாஜக-வை ஆதரித்தாலும் எதிர்த் தாலும் யாரும் எதுவும் சொல்லப் போவதில்லை. எதைச் செய்தா லும் தைரியமாக, வெளிப்படை யாக செய்து பழக்கப்பட்டவர் ஜெய லலிதா. அப்படி இருக்கையில், நாங்கள் எதற்காக அன்டர்கிரவுண்ட் டீல் வைத்துக்கொள்ள வேண்டும்?

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுபடுவதற்காகவே பாஜக அரசு டன் ஜெயலலிதா மென்மையான போக்கை கடைபிடிப்பதாக விமர்சிக்கப்படுகிறதே?

வழக்கிலிருந்து விடுதலையா வதுதான் நோக்கம் என்றால் இதற்கு முன்பு 15 ஆண்டுகள் ஆட்சியிலிருந்த காங்கிரஸோடு ஒத்துப்போயிருக்கலாமே? எந்த வழியிலாவது போய் வழக்கை சீக்கிரமாக முடித்துவிட வேண்டும் என அவர் அவசரப்படவில்லை. எதையுமே அவர் சட்டப்பூர்வமாக சந்திக்க நினைப்பவர். அதனால் தான் இந்த வழக்கு 18 ஆண்டுகள் நடந்தன. தனது சொந்த நலனுக்காக எந்தச் சூழலிலும் மத்திய அரசுக்குப் பணிந்து போகமாட்டார் ஜெயலலிதா. அதேசமயம், மத் திய அரசுடன் இணக்கமாக இருந்தால்தான் தமிழகத்துக்கான தேவைகளை பெறமுடியும். அதற் காக சில நேரங்களில் மென்மை யாக நடந்து கொண்டிருப்பார். அதேசமயம், சண்டையிட்டுப் பெறவேண்டிய விஷயங்களுக்காக அதிமுக, மத்திய அரசுடன் சண்டை போடவும் தயங்கியதில்லை.

திராவிடக் கட்சிகள் இலவசங்களைக் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்குவதாக சொல்லப்படுவது பற்றி..?

பொத்தாம் பொதுவில் அப்படிச் சொல்லிவிடமுடியாது. லோயர் மிடில் கிளாஸ் மாணவனுக்கு லேப்டாப் என்பது எட்டாக்கனி. அதை அவனுக்கு இலவசமாக கொடுப்பதில் பயன் இருக்கிறது. பெண்களின் வேலை பளுவை குறைப்பதற்காக மிக்ஸி, கிரைண்டர் கொடுக்கிறோம். அதனால் அவர்கள் சோம்பேறி ஆவார்கள் என்று சொல்வது நியாயமில்லை. ஆனால், சன் டி.வி-யின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை ஏற்றுவதற்காக கருணாநிதி கொடுத்தாரே இலவச டி.வி. அதுதான் மக்களை சோம்பேறிகளாக்கும்.

அதிமுக ஆட்சியில் ஊழல் மலிந்து, அரசு நிர்வாகம் ஸ்தம்பித்துக் கிடப் பதாக பரவலாக பேசப்படுகிறதே?

அதிமுக மீது அப்படி எந்த ஊழலையாவது ஆதாரப்பூர்வமாக சொல்லமுடியுமா? ஜெயலலிதா முதல்வராக இல்லாதபோது கரு ணாநிதி போன்றவர்கள் தினம் ஒரு குற்றச்சாட்டை கிளப்பிக் கொண்டிருந்தார்கள். உண்மை மக்களுக்குத் தெரியும் என்பதால் ஜெயலலிதா அமைதி காத்தார். நாங்களும் அமைதியாக இருந் தோம். எங்கள் ஆட்சியில் அதிகாரி கள் சுதந்திரமாக செயல்படுவதால் அரசு நிர்வாகம் செம்மையாகவே செயல்படுகிறது.

மீண்டும் திமுக ஆட்சிக்கு வரும் என்று ஸ்டாலின் தீர்க்கமாக கூறுகிறாரே?

கடந்த 4 ஆண்டுகளில் ஸ்டாலின் சொன்ன ஏதாவது ஒன்று நடந்திருக்கிறதா? அவ்வளவு நம்பிக்கை உள்ளவர் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை.

மக்களுக்காகவே ஆட்சி நடத்து வதாகச் சொல்லும் அதிமுக, பெண்களின் கண்ணீரைத் துடைக் கும் வகையில் மதுவிலக்கை அமல்படுத்த தயங்குவதேன்?

இதற்கு முன்பு ஒயின் ஷாப்களை வைத்து தனியார் லாபம் சம்பாதித்தனர். அப்போது கள்ளச் சாராயமும் விற்கப்பட்டதால் நிறைய உயிர் பலிகள் நடந்தன. அதையெல்லாம் மாற்றி, அதிகம் ஆபத்தில்லாத மது வகைகளை டாஸ்மாக் மூலம் விற்பனை செய்ய வைத்து வருமானத்தையும் அரசின் கஜானாவுக்கு திருப்பினார் ஜெயலலிதா. இதனால் கள்ளச் சாராயம் அடியோடு ஒழிக்கப்பட்டு உயிர் பலிகள் தடுக்கப்பட்டன. தமிழக பெண்கள் மீது அதிக அக்கறையும் பரிவும் ஜெயலலி தாவுக்கு இருக்கிறது. பெண்களின் பிரச்சினை தீரும் என்றால் கட்டாயம் மதுவிலக்கை அமல்படுத்துவார்.

சட்டமன்றத் தேர்தலில் எதை முன்னிறுத்தி நீங்கள் பிரச்சாரம் செய்யப் போகிறீர்கள்?

அதிமுக ஆட்சியின் சாதனை களைச் சொன்னாலே போதுமே.

SCROLL FOR NEXT