அழகிரி இல்லாததால் தான் திமுக படுதோல்வியை சந்தித்து இருக்கிறது என்கிற தொனியில் ட்விட்களை ரீ-ட்வீட் செய்து வருகிறார் தயாநிதி அழகிரி.
இன்று காலை மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியானது. திமுக கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. அதற்கு அழகிரியைத் தி.மு.க வில் இருந்து நீக்கியதே காரணம் என்று அவருடைய ஆதரவாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அழகிரிக்கு ஆதரவாக ட்விட்டர் தளத்தில் யாரெல்லாம் கருத்து தெரிவித்தார்களோ, அவர்களது ட்விட்கள் அனைத்தையும் ரீ- ட்வீட் செய்து வருகிறார் தயாநிதி அழகிரி.
பலரும் தயாநிதி அழகிரி ட்விட்டர் தளத்திற்கு, திமுக தோல்விக்கு அழகிரி இல்லாதது தான் காரணம் என்று டிவீட் செய்தார்கள். அப்படி இடப்பட்ட அனைத்து ட்வீட்களையும் ரீ-ட்வீட் செய்தார்.
மேலும் திமுக தோல்வி குறித்து தயாநிதி அழகிரி " திமுகவின் தோல்விக்கு யாராவது பொறுப்பேற்க வேண்டும். யாராவது தயாராக இருக்கிறார்களா.. அப்படி என்றால் அது யார்? திமுகவில் ஏதாவது நீக்கம் இருக்குமா? இது வரை வெளியான தேர்தல் முடிவுகளில் திமுக சந்தித்துள்ள மிகவும் தர்மசங்கடமான தோல்வி இதுதான். திமுக நிலைமை மிகவும் மோசமாக உள்ளது" என்று கூறியிருக்கிறார்.