தமிழகம்

இங்கிலாந்து பல்கலைக்கழக விருதைப் பெற்று சவீதா பொறியியல் கல்லூரி மாணவர் சாதனை

செய்திப்பிரிவு

சவீதா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனி கேஷன்ஸ் இன்ஜினீயரிங் (இசிசி) படிக்கும் மணிகண்ட மானே என்ற மாணவர் இங்கிலாந்தில் உள்ள பிளைமவுத் பல்கலைக்கழத்தின் மதிப்பு வாய்ந்த விருதைப் பெற்றுள் ளார்.

சவீதா பொறியியல் கல்லூரி யில் இறுதியாண்டு இசிஇ பட்டப் படிப்பு படித்து வருபவர் மணிகண்ட மானே. அவர் தனது புராஜெக் டுக்காக இன்ட்ரா ஆக்யுலர் பிரஷர் சென்சார்களில் பயன்படும் 'கிராபீன் பிலிம்'-ஐ உருவாக்கும் தொடக்க கட்ட முயற்சியில் ஈடுபட்டி ருந்தார். அப்போது செமஸ்டர் அப்ராட் திட்டத்தின்கீழ் இங்கிலாந் தின் பிளைமவுத் பல்கலைக்கழகத் தில் இறுதி செமஸ்டரை படிக் கும் வாய்ப்பைப் பெற்றார். அப் போது பிளைமவுத் பல்கலை.யுடன் இணைந்து மேலும் மெல் லிய கிராபீன் பிலிமை தயாரிக் கும் முயற்சியில் ஈடுபட்டார். இந் நிலையில் அவருக்கு 'வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்' விருது கிடைத்துள்ளது. இந்த விருது ரூ.10 ஆயிரம் ரொக்கம், பாராட்டுப் பத்திரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

விருது வழங்கும் விழா சவீதா பல்கலை. வேந்தர் என்.எம்.வீரய்யன் தலைமையில் சென் னையில் நடை பெற்றது. பிளைமவுத் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் டேவிட் ஜென்கின்ஸ் விருதை வழங் கினார்.

பிளைமவுத் வணிகவியல் கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த அதுல் மிஸ்ரா, சவீதா பல்கலை. இயக்குநர் தீபக் நல்லசுவாமி, மருத்துவக் கல்லூரி இயக்குநர் சவீதா ராஜேஷ், பொறியியல் கல்லூரி இயக்குநர் எஸ்.ராஜேஷ், முதல்வர் பி.சங்கர், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT