உலக யோகா தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சிக்கு ஈஷா யோகா மையம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஈஷா யோகா மையத்தின் இயக்குநர் கோபால் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: உலக யோகா தினத்தை முன்னிட்டு சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் சுமார் 25 ஆயிரம் பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி வரும் 21-ம் தேதி நடைபெற உள்ளது. ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் கலந்துகொண்டு நேரடியாக பயிற்சி அளிக்கிறார்.
அன்று காலை 6.15 மணிக்கு பிரபல கர்னாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன் இசையுடன் நிகழ்ச்சி தொடங்கும். மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.