லயோலா கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்கள், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரி மாணவர் பேரவை துணைத் தலைவர் பாலமுருகன், துணைச் செயலா ளர் அருண், செயலாளர் கெவின் ஆகியோர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர்கள் வி.பி.துரைசாமி, ஐ.பெரியசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மாணவரணி துணைச் செயலாளர் சி.இலக்குவன் மற்றும் லயோலா கல்லூரி மாணவர்கள் உடனிருந்தனர்.