தமிழகம்

திமுகவும் அதிமுகவும்தான் தேர்தலில் எங்களுக்கு போட்டி: ஜி.கே.வாசன் கருத்து

செய்திப்பிரிவு

அதிமுக, திமுக தான் எங்களுக்குப் போட்டி. காங்கிரஸ் போட்டியில்லை என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார். சிவகங்கை மாவட்டம், உத்தம் பட்டியில் நேற்று நடைபெற்ற ஒரு விழாவில் அவர் பேசியதாவது:

தமிழகத்தை மாறி, மாறி ஆட்சி செய்த திராவிடக் கட்சிகள் எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டுவரவில்லை. இவர்களுக்கு மாற்று தமாகாதான். காமராஜர் ஆட்சியில் விவசாயம், தொழில், கல்வித் துறைகளில் புரட்சி ஏற்பட்டது.

வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுகதான் எங்க ளுக்குப் போட்டி. காங்கிரஸ் எங்க ளுக்குப் போட்டியில்லை. வரும் தேர்தலில் மக்களும், தொண்டர் களும் விரும்பும் கட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும்.

சிவகங்கை மாவட்டத்தில் தமாகா-வின் பலம் அதிகரித்து வருகிறது. எஸ்.புதூர் ஒன்றியத்தில் காய்கறிகளுக்கு சந்தைப்படுத்தும் வகையில் குளிரூட்டும் கிடங்கு வசதி ஏற்படுத்தி தரவேண்டும். நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கொண்டு வந்து விவசாயிகளின் நலனுக்கு எதிராக மத்திய பாஜக அரசு செயல்படுகிறது என்றார்.

SCROLL FOR NEXT